Shadow

Tag: சிவசங்கர் மாஸ்டர்

ஆண் பாதி பெண் பாதி

ஆண் பாதி பெண் பாதி

சினிமா, திரைத் துளி
கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் என்பவர் கதை எழுதித் தயாரிக்கும் படம் அர்த்தநாரி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட, மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது . நாயகன் ராம்குமார் பேசும்போது, “நடிகனாவேன் என நினைக்கலை. மாடலிங்கில் இருந்தப்ப நான் பண்ண விளம்பரம் ஒன்னு சத்யம் தியேட்டர்ல வந்துச்சு. அதைப் பார்த்துட்டுத்தான் தயாரிப்பாளர் முத்தமிழ் என்னிடம் கேட்டார். ஐ.டி.யில் வேலை செய்துட்டிருந்தேன். வேலையை விட்டுட்டு என்ன பண்ணலாம்.. ஃபோட்டோகிராஃபி அது இதுன்னு குழப்பிட்டு இருந்தேன். அப்பத்தான், ‘உங்க மேல் கான்ஃபிடண்ட் இருக்கு’ன்னு சொல்லி நடி...