தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் 'சிவா மனசுல புஷ்பா'. ‘இந்தப் படத்தின் தலைப்பைத் தூக்குங்கள்’ எனக் கூறித் தயாரிப்பாளரும் இயக்குநருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள்.
இந்தப் பிரச்சனையைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்வதற்காகவும், சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் வாராகி.
"நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம். சம கால நிகழ்வுகளைக் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன். படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடங்கள் தான். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்துட்டு இரண்டரை மணி நேரம் விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்கச் சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு...