Shadow

Tag: சி.சு.செல்லப்பா

டுர்ர்ர்ரீ

டுர்ர்ர்ரீ

கட்டுரை, புத்தகம்
படிக்கிறோமோ இல்லையோ.. புக் ஷாப்பிற்கு போனா சும்மாவாச்சும் ஒரு புக் வாங்கணும்னு தோணும். அன்னிக்கும் அப்படித் தான். கையில காசும் அதிகமா இல்ல. குட்டிப் போட்ட பூனையாட்டும் சுத்திட்டிருந்த தினேஷின் தோளைப் பிடிச்சிழுத்து, "நல்ல புக் ஒன்னு சொல்லுடா?" என என் பட்ஜெட்டையும் சொன்னேன். அவன் யோசிக்காம, "வாடிவாசல்" என்றான்."வாடி வாசலா?""செம புக். சூப்பரா இருக்கும். ஜல்லிக்கட்டு பத்தி புக்.""உன்கிட்ட இருக்கா?""இல்ல. மிஸ் பண்ணாம வாங்கிடு. ரொம்ப நல்லா இருக்கும்னு எல்லாம் சொன்னாங்க.""அட வெண்ண. படிக்காமலே இவ்ளோ பில்டப்பா? உன்ன போய் கேட்டேன் பாரு" என்று நான் சொல்றத காதில் வாங்காம, ஷெல்ஃபில் தேடி எடுத்து புக்கை கையில் கொடுத்துட்டான். சின்ன புக். 50 ரூபாய் தான். ஆனா முதல் பதிப்பு 1959ன்னு போட்டிருந்துச்சு. புரியுமான்னு சந்தேகம் வந்துச்சு. சரி போய் தொலையட்டும் என ஒன்னும் சொல்லாம...