Shadow

Tag: சீதா ராமம்

மெல்ஃபெர்ன் 23′ விருதை வென்ற ‘சீதா ராமம்’

மெல்ஃபெர்ன் 23′ விருதை வென்ற ‘சீதா ராமம்’

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
 ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடத்தப்படுவதும் அவற்றில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது அளிப்பதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மெல்போர்ன் நகரில் 14வது இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது.இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கானப் பிரிவில் போட்டியிட்ட “சீதா ராமம்” திரைப்படம் அப்பிரிவில் விருதை வென்றிருக்கிறது. சென்ற ஆண்டு துல்கர் சல்மான் – மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் ஹனுராகவ புடி இயக்கத்தில் வெளிவந்த அற்புதமான காதல் காவியம்  “சீதா ராமம்”.  யாருமற்ற ஒரு இராணுவ வீரனுக்கும், ராஜா ராணி பரம்பரையில் வந்த ஒரு ராணிக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த அத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் சாதனை புரிந்தது நினைவு இருக்கலாம்.இப்படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான வைஜெயந...
சீதா ராமம் விமர்சனம்

சீதா ராமம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, உடை வடிவமைப்பு, நடனம் என எல்லா வகையிலும் நிறைவைத் தருகிறது சீதா ராமம். காஷ்மீர், காதல் என மனதைக் குளிர வைக்கும் படம். பாகிஸ்தான் பிரிகேடியர் தாரிக்கின் பேத்தி அஃப்ரீன், 1965 இல் இந்தியன் லெஃப்டினென்ட் ராம் எழுதிய கடிதத்தை அவரது காதலி சீதா மகாலக்‌ஷ்மியிடம் ஒப்படைக்க, 1985 ஆம் ஆண்டு இந்தியா வருகிறார். அஃப்ரீனின் தேடல் படலத்தில், ராம் - சீதாவின் காதல் அழகாய் மொட்டவிழ்த்து மலரத் தொடங்குகிறது. கூடவே, ராம் தன் காதலிக்கு எழுதிய கடிதம் எப்படி பாகிஸ்தானின் பிரிகேடியருக்குக் கிடைத்தது என்ற சஸ்பென்ஸைக் கடைசி வரை தக்க வைத்துள்ளனர். எந்தக் கதாபாத்திரத்திற்கும் தன்னை அசால்ட்டாகப் பொருத்திக் கொள்ளும் மராத்தி நடிகரான சச்சின் கடேகர், பிரிகேடியர் தாரிக் பாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் எனச் சொல்லக் கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக வடிவம...
சீதா ராமம் – காஷ்மீரும் தனிமையும் காதலும்

சீதா ராமம் – காஷ்மீரும் தனிமையும் காதலும்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
நடிகர் துல்கர் சல்மான், நடிகை ராஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பட...
சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்களப் பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்ப...