மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்
சத்யராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' எனும் இணைய தொடரின் ட்ரெய்லரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது. இந்தத் தொடர் தவரும் ஆகஸ்ட் 16 முதல், ஒளிபரப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.
'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.
இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார்.
நடிகர் சத்யராஜுடன் பழம...