
திருமணம் விமர்சனம்
வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக இழந்துவிடுவது நம் பெருமைகளில் ஒன்று. கையில் பணமில்லாவிட்டாலும், பணத்தை எப்படியேனும் புரட்டி வாழ்நாளைக் கடனாளியாகக் கழிக்க அஞ்சாத தற்கொலை மனோபாவம் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மிகவும் அரிதானவை.
சேரன் முன் வைக்கும் திருத்தம், திருமண வைபவத்தில் அதீதமாக விரயமாகும் பொருளாதாரத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒன்றை மட்டுந்தான். தலைப்பில் தொனிக்கும் திருத்தங்'கள்' என்ற பன்மை விகுதி ஒரு சினிமாட்டிக் எக்ஸாகிரேஷன் தான்.
சமூகத்தின் மீதான சேரனின் அதீத காதல் அவரது கலையார்வத்தையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். பெரியண்ணன் பாவனையில், தலைப்பிலேயே 'திருத்தங்கள்' என்று தன் சமூக அக்கறையை அடக்கமாட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். சேரன் பேசிக் கொண்டேயிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டாரிடம் விவாதத்தை முன் வைக்காமல், இதுதான் சரியெனத் தான் நம்பும் விஷயத்தை இடம் பொருள் ஏ...


