த்ருஷ்யம் 2 – மீண்டும் சுஜா வருணி
நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தையும், அன்பான பண்பு நலனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர் நடிகை சுஜா வருணி. அவருடைய கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்திருக்கிறது.
திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2'...