நான் சிகப்பு மனிதன் விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை.
29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது.
இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் ...