Shadow

Tag: சுனில் குமார்

மூன்றாம் உலகப் போர் விமர்சனம்

மூன்றாம் உலகப் போர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2022 இல் நடக்கும் போரில், இந்தியாவிடம் சீனா தோற்கின்றது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2025 இல் சீனா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை. மிகக் குறைவான கதாபாத்திரங்களுடன் மிகக் குறைவான லோக்கேஷன்களில் எடுக்கப்பட்டுள்ள இயக்குநர் சுகன் கார்த்தியின் கன்னி முயற்சியே இப்படம். ஆனால், பிரம்மாண்டமான கதை. சி.ஜி. (கணினி வரையியல்) தொழில்நுட்பத்தின் மூலம் இயக்குநர் முடிந்தளவு கதையின் பிரம்மாண்டத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முனைகிறார். படத்தின் மொத்த சுமையும் மேஜர் சரவணன் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாலை படத்து நாயகன் சுனில் குமார் மேஜர் சரவணனாக நடித்துள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், காதல் மனைவியை இடையிடையே ஏக்கத்துடன் நினைவுகூர வேண்டும், சீன இராணுவத்தின் சித்திரவதைகளைத் தாக்குபிடிக்க வேண்டும், இறுதியில் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். எல்லாம் செய்கிறார். சீனரிடம் வ...
பாலை விமர்சனம்

பாலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாலை - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம் என்று பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கினாராம் இப்படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.முல்லை நிலப்பகுதியான ஆயக்குடி (ஆயர்க்குடி) -யில் வாழும் தமிழர்களை வடக்கில் இருந்து வரும் தமிழறியா வந்தேறிகள் பாலை நிலப்பகுதிக்கு துரத்தி விட்டு விடுகின்றனர். முல்லைக்கொடி என தற்காலிக தங்குமிடத்திற்கு பெயர் வைத்துக் கொண்டு வாழுகின்றனர் தமிழர்கள். பாலை (!?) வருகிறது என அறிகுறி தென்படுவதால் குழப்பமுறும் தமிழர்கள், இழந்து விட்ட தன் சொந்த மண்ணான ஆயக்குடியைக் கைப்பற்ற விரும்புகின்றனர். அவர்கள் விருப்பம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.தமிழர்கள் வந்தேறிகளால் பாலை நிலத்திற்கு துரத்தப்பட்டதாகவும்...