Shadow

Tag: சுனைனா

வரலட்சுமி சரத்குமாரின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் சபரி மே 3ல் வெளியாகிறது

வரலட்சுமி சரத்குமாரின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் சபரி மே 3ல் வெளியாகிறது

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள...
இன்ஸ்பெக்டர் ரிஷி – இயற்கை அமைதி மர்மம்

இன்ஸ்பெக்டர் ரிஷி – இயற்கை அமைதி மர்மம்

OTT, Web Series
மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.பத்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் மார்ச் 29 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரீமியர் செய்யப்பட உள்ளது.இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் சூழல், இன்ஸ்பெக்டர் ரிஷி மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், (அய்யனார் மற்றும் சித்ரா,) காட்டின் ரகசியங்களை வெளிக்கொணரும் மற்றும் இந்த விவரிக்க முடியாத நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறியும் சவாலை ஏற்கின்றனர். மூவரும் தங்களுட...
ரெஜினா விமர்சனம்

ரெஜினா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், ரெஜினாவின் கணவரும் வங்கி ஊழியருமான ஜோ கொடூரமாகக் கொல்லப்படுகிறார். ஒரே நாளில் தன் வாழ்வை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கின கொள்ளையர்களைத் தேடிச் சென்று எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் ரெஜினா படத்தின் கதை. ரெஜினாவாக சுனைனா நடித்துள்ளார். மீனுக்காக ஒற்றைக் காலில் காத்திருக்கும் கொக்கு போல் பழி வாங்குவதற்கான தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்துள்ளார் சுனைனா. ரிது மந்தாராவைக் கடத்தி, நிவாஸ் ஆதித்தனை மிரட்டி தன் பழிவாங்கும் பயணத்தை நகர்த்துகிறார் சுனைனா. நண்பர்கள் உதவி செய்கின்றனர் எனக் காட்டப்பட்டாலும், சுனைனா தன் இரையை மிகச் சுலபமாக நெருங்குவது திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது. பவா செல்லத்துரை, டெர்மினேட்டர் அர்னால்டை நினைவுறுத்துவது போல் ஆடாமல் அசையாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வசனம் பேசுபவராக உள்ளார். ‘ஐயோ, பாவம்’ என அவர் இரக்கப்பட்டால...
லத்தி விமர்சனம்

லத்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கான்ஸ்டபிள் முருகானந்தம், ஹாலிவுட் ஹீரோவிற்கு இணையாக ஒரு மிஷனைக் கையிலெடுத்துச் சாதித்து முடிக்கிறார். சஸ்பெண்டில் இருக்கும் முருகானந்தத்திற்கு, அவரது லத்தி சார்ஜ் திறமைக்காக மீண்டும் வேலை கிடைக்கிறது. ‘இனி லத்தியால் யாரையும் அடிப்பதில்லை’ எனத் தீர்மானிக்கும் முருகானந்தம், அதன் பின் சுமார் நூற்றைம்பது பேரை அடி வெளுக்கிறார். சரியாகச் சொல்வதனால், என்கவுன்ட்டர் செய்வதை ஹீரோயிசமாகக் கருதும் கோலிவுட்டின் சூப்பர் காப்பாகவே மாறிவிடுகிறார். நர்ஸ் கவிதாவாக வரும் சுனைனாவின் தேர்ந்த நடிப்பால், படத்தின் முதற்பாதி அழகாகிறது. நன்றாக நடிக்கும் அவரை உபயோகித்துக் கொள்ள தமிழ் சினிமா காட்டிவரும் சுணக்கம் துரதிர்ஷ்டவசமானது. முருகானந்தத்தின் மகன் ராசுவாக மாஸ்டர் லிரிஷ் ராகவ் நன்றாக நடித்துள்ளார். ஒரு பெண், வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள். அதைச் செய்தது யாரென மர்மமாகவே இருக்க, விஷால் அதைக் கண்டுபிடி...
சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்த உலகம் அன்பிற்கானது. இந்த மனிதர்கள் அன்பால் ஆனவர்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள். அன்பை அதிகாமாக வைத்திருப்பவர்களும் கூட என்பதைக் கவித்துவமாகச் சொல்லிச் செல்கிறது சில்லுக்கருப்பட்டி. நான்கு கதைகளுக்குள் நான்கு வாழ்க்கையை வைத்து சில்லுக்கருப்பட்டியைத் திகட்டாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். குப்பை மேட்டில் கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் ஒரு சிறுவன் கையில் கிடைக்கும் வைரமோதிரமும், அந்த மோதிரத்தைத் தொலைத்த பணக்கார வீட்டுச் சிறுமியும் எப்படி நட்பாகிறார்கள் என ஒரு கதை. திருமணம் நிச்சயமாகி இருக்கும் வேளையில் கேன்சர் வந்த ஐடி இளைஞனும், அவனோடு ஓலா காரில் ட்ராவல் ஷேர் செய்து, பின் காதலை ஷேர் செய்யும் பெண்ணுக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒரு கதை. முதிர்ந்த வயதிலும் காதல் வரும் என்பதையும், அந்தக் காதல் வருவதற்கான காரணத்தையும் அற்புதமாகச் சொல்லும் ஒரு கதை. திருமணம் மு...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக்...
நம்பியார் விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கும் ராமசந்திரன் தன் மனதின் எதிர்மறை எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து எம்.ஜி.ஆர். எனப் பெயரிடுகிறான். சதா சர்வ காலமும் தொந்தரவு செய்து குழப்பம் நம்பியாரை மீறி, ராமசந்திரன் தான் எண்ணியதை அடைகிறானா இல்லையா என்பதே படத்தின் கதை. குழப்பும் நெகடிவ் மனசாட்சியான நம்பியாராக நடித்துள்ளார் சந்தானம். நண்பனாக வந்து நாயகனைக் கலாய்ப்பதற்குப் பதில், மனசாட்சியாக வந்து கலாய்க்கிறார். சந்தானத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரியாதது; ராமசந்திரன் போட்டிருக்கும் அதே டீ-ஷர்ட்டை அணிந்திருப்பது; வாய் ஓயாமல் தொணத்தொணவென்று பேசிக் கொண்டிருப்பதென மனசாட்சியை நன்றாக வடிவமைத்திருக்கார்கள். ராமசந்திரனாக ஸ்ரீகாந்த்; சரோஜா தேவியாக சுனைனா. படத்தை ஸ்ரீகாந்தே தயாரித்தும் உள்ளார். கதாபாத்திரத்தை ரசித்து நடித்துள்ளார். உள்ளுக்குள் இருக்கும் நம்பியார் விழித்துக் கொள்ள, சந்தானத்தின் குரலில் குடித்து விட்ட...