Shadow

Tag: சுரேஷ் சந்திரா

கட்டப்பாவ காணோம் விமர்சனம்

கட்டப்பாவ காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'ஏழு கலர்' மீஞ்சூர் வஞ்சரம் என்ற தாதாவிடமிருந்து, அதிர்ஷ்டத்தைத் தரும் கட்டப்பா எனும் வாஸ்து மீன் தொலைந்து விடுகிறது. பிறந்தது முதலே அதிர்ஷ்டம் கெட்டவராகக் கருதப்படும் 'பேட் லக் (bad luck) சிபி சத்யராஜின் வீட்டுக்கு அம்மீன் வந்து சேர்கிறது. பின் சிபி சத்யராஜின் வாழ்வில் என்ன மாதிரியான மாறுதல்கள் ஏற்படுகிறது என்பதே படத்தின் கதை. மீஞ்சூர் வஞ்சரமாக மைம் கோபி நடித்துள்ளார். திரைக்கதை தான் படத்திற்கு வில்லன் எனினும் இவரை வில்லன் எனக் கருதிக் கொள்ளலாம். தனது அனைத்து அதிர்ஷ்டத்துக்கும் கட்டப்பா தான் காரணமென நம்பும் பாத்திரம் இவருக்கு. மீன் காணாமல் போனவுடன், அவர் அடையும் பதற்றத்தைக் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். படத்தில் முழுமையாக வார்க்கப்பட்டுள்ள மிகச் சொற்ப கதாபாத்திரங்களில் இவருடையதும் ஒன்று. இரண்டே இரண்டு காட்சியில் வந்தாலும், 'பெயின்டர்' நண்டாக வரும் யோகிபாபு வழக்கம் போ...
குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயைந்...
ஏண்டா தலைல எண்ண வெக்கல – ட்ரெய்லர்

ஏண்டா தலைல எண்ண வெக்கல – ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
'யோகி & பார்ட்னர்ஸ்' சார்பில் இசையமைப்பாளர் - பாடகர் ரெஹானா தயாரித்திருக்கும் திரைப்படம், 'ஏண்டா தலைல எண்ண வெக்கல'. கற்பனை கலந்த நகைச்சுவைப் பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை, ரெஹானாவின் நண்பர்களான சுபாவும் ஆசீர்வாதமும் இணை தயாரிப்பாளராக உதவியுள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ஜெயம் ரவி வெளியிட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர், யுடியூப் டிரெண்டிங் வரிசையில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குநர் வி. விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கி இருக்கும் 'ஏண்டா தலைல எண்ண வெக்கல' படத்தில் புதுமுகம் அசார் மற்றும் 'சூது கவ்வும்' புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களிலும், யோகி பாபு, மன்சூர் அலி கான், 'வழக்கு என் 18/9' புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், 'இருக்கு ஆனா இல்ல' புகழ் ஈடன், சிங்கப்பூர் தீபன், ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாப்பா...
ரம் விமர்சனம்

ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அநிருத் இசையமைத்த 13வது படமான ‘ரம்’, ஒரு பேய்ப்படம் என்பது ஒரு சுவாரசியமான ஒற்றுமை. பேய்ப்படங்கள் பார்ப்பதையே தவிர்க்க விரும்பும் அநிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட ஒரு குடும்பம், பேய்களாக மாறிக் கொன்றவர்களைப் பழி தீர்க்கிறது. வேலை இல்லா பட்டதாரி படத்தில், தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் (H சைலன்ட் என்பதால் ரிஷிகேஷ் என்றே திரையில் பெயர் வருகிறது) தான் இப்படத்தின் நாயகன். அநிருதின் கஸினும் கூட. படத்தின் நாயகன் என்றாலும், பேய்ப்படத்தில் ‘சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ பேய் தானே! ஆகையால், அவர்க்கு அழுத்தமான அறிமுகமாக இப்படம் அமையவில்லை என்றே தோன்றுகிறது. பேயிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அவரும் ஒருவர் என்ற அளவில் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறார். ‘இவன் முகத்தில ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்டான். இவன் கோபப்படுறானா வருத்தப்படுறானான்னே தெரில’ என விவேக...
போகன் விமர்சனம்

போகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பிரவ...
கேரளத்து ஐஸ்வர்யா

கேரளத்து ஐஸ்வர்யா

சினிமா, திரைத் துளி
கேரளாவைப் பூர்விகமாகப் கொண்டிருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். ஏற்கெனவே, கன்னடத்திலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். "தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கின்றது. இந்தப் படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்திரம். தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது” என்றவர், “சூப்பர் ஸ்டாரின் படத் தலைப்பான வீராவின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது...
ஓர் அறை – தாயம்

ஓர் அறை – தாயம்

சினிமா, திரைச் செய்தி
தாயம் என்ற தமிழ்ப்படம், இந்தியாவின் முதல் சிங்கிள் ரூம் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. “நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். சிங்கிள் ரூமில் எடுக்கப்பட்ட படங்கள் ஏராளமாய் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. என் படத்தில், எந்தக் காட்சியிலும் அந்தப் படங்களின் சாயல் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இப்படத்தை எடுத்துள்ளேன்” என்றார் தாயம் படத்தின் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி. எட்டுக் கதாபாத்திரங்கள் ஓர் அறையில், நேர்க்காணலுக்காகக் கூடுகின்றனர். எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பதுதான் தாயம் படத்தின் கதை. நல்லதொரு ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். டீசரையும் ட்ரெயிலரையும் மட்டுமே பார்த்துக் கவரப்பட்டு, காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் படத்தை வெளியிட முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டீசரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த முகமூடியை (ப்ரோஸ...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது அவரது பூர்வஜென்மத்தைக் கிளறி எப்படி அலைக்கழிக்கிறது என்பதும்தான் படத்தின் கதை. குரல்கள் கேட்பதை ‘ஆ’ நாவலிலிருந்தும், அதற்கான காரணத்தை ‘லூசி’ படத்திலிருந்தும் தழுவி சைத்தானை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ நாவலினின்று, மிகக் கச்சிதமான முதல் பாதியைத் தந்துள்ளா...
பூனைக்குள் ஆவி – மியாவ்

பூனைக்குள் ஆவி – மியாவ்

சினிமா, திரைச் செய்தி
“பூனையைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு இந்திய அளவில் எடுக்கப்பட்டிருக்கும் முதற்படம் இது தான்” எனப் பெருமிதப்படுகிறார் ‘மியாவ்’ படத்தின் இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி. இவரொரு விளம்பரப் பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணைச் சீரழித்து விடுகின்றனர் இளைஞர்கள் சிலர். அந்தப் இளம்பெண்ணின் ஆவி பூனைக்குள் புகுந்து கொண்டு அவர்கள் அனைவரையும் பழி வாங்குகிறது. அவ்விளைஞர்கள் ஒவ்வொருவரையும், புதுப் புது விதமாகப் பழி வாங்குவதுதான் படத்தின் சுவாரசியம் என்கின்றனர். ஹரார் படம் தான் என்றாலும், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் எடுக்கப்பட்ட காமிக்கல் ஃபேண்டசி படம் என்பதே பொருந்தும் எங்கின்றனர் படக்குழு. மேலே படத்திலுள்ள பெர்ஷியன் பூனை தான் படத்தின் ஹீரோ. கிராஃபிக்ஸில் பூனை நடனம் ஆடுகிறது; அதுவும் டூயட். இந்தப் பூனையைத் துரத்த நினைக்கும் காவல்துறையினரைப் படாதபாடுப்படுத்துகிறது. ரமேஷ் ஆச்சார்யா எ...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் க...
குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

சினிமா, திரைத் துளி
"ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு. நல்லதொரு கதைக்களமமும், அந்தக் கதைக்களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதன் படி இயக்குநர் அறிவழகன் செதுக்கி இருக்கும் குற்றம் 23 படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமான முறையில் உருவாகி நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாதமாக வர, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார். சமீபத்தில் குற்றம் 23 படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த எங்கள் இருவருக்கும், எப்படி எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்பிற்கு, தற்போது பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னைப் பாராட்டிய போது மிக உற்சாகமாக இருந்தது. குற்றம் 23 படத்தின் ஆரம்ப கட்டத்...