நந்திவர்மன் விமர்சனம்
பல்லவர் காலத்தில் செஞ்சி நகரை ஆண்டு வந்த நந்திவர்மன் என்கின்ற அரசன், தன் ஊரை கொள்ளையிட வந்த கொள்ளையர் கூட்டத்தினை விரட்டியடிக்கும் முயற்சியில் மாண்டு போகிறான். அதனைத் தொடந்து அந்த ஊரும், நந்திவர்மன் பூஜித்து வந்த சிவபெருமான் கோவிலும் பூமிக்குள் புதையுண்டு போனதாக நம்பப்படுகிறது. இதை அறிந்து கொள்ளும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவினர், செஞ்சி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தி புதையுண்ட கோவிலையும், நந்திவர்மனின் வரலாற்றை மீட்டு உலகிற்கு உரைக்க முடிவு செய்து, ஒரு குழுவாக செஞ்சி பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அந்த ஊரில் சிலர் இரவு நேரத்தில் அந்த கோவில் புதையுண்ட பகுதிக்கு சென்று மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது என்று அந்த ஊரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஊர் மக்கள் அந்தக் கோவில் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி ச...