Shadow

Tag: சு.செந்தில்குமரன்

அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
அண்ணாதுரை படத்தில் கோதண்டம் பாத்திரத்திற்கு அற்புதமான ஜீவனை அளித்திருப்பார் பத்திரிகையாளரும் நடிகருமான சு. செந்தில் குமரன். அவர், தனது அம்மாவின் மரணத்தைத் தாங்க முடியாதவராகத் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள, அம்மாவின் நினைவாக 67 கவிதைகளை இயற்றியுள்ளார். மரணித்த பொழுது அவரது அம்மாவின் வயது 67. பெண்ணென்றால் பேயென்றே விண்ணதிரச் சொன்ன பட்டினத்தான் அன்னையென்ற உறவை மட்டும் அள்ளிக்கொண்டான் - ஆங்கே அழுதழுது புரண்டபடி கொள்ளி வைத்தான். அப்படிப் பட்டினாத்தானே மூழ்கிய பாசத்தாய்ப் பெருங்கடலைத் தன்னால் எப்படி நீந்திக் கடக்க முடியும் எனக் கேள்வியெழுப்புகிறார். மரணச் செய்தி கேட்ட நொடி ஏற்பட்ட அதிர்வு முதல் அம்மாவின் நினைவு எழுந்து வாட்டும் ஒவ்வொரு தருணத்திலும், அம்மா இருந்தால் என்ன செய்திருப்பார் என, அம்மாவின் நினைவுகளில் புதைந்து ஆறுதல் காண முற்படுகின்றன அவரது கவிதைகள். செந்தில் குமரனின் அம்மா...
அண்ணாதுரை விமர்சனம்

அண்ணாதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘அண்ணாதுரை’ எனும் தலைப்பு வைத்ததற்கு எந்தச் சிக்கலும் எழாதது அதிசயத்திலும் அதிசயம். ஆனாலும் உண்மை. அனைவரும் எதிலோ பிசியாக இருந்து விட்டதால், இந்தப் படத்துக்கு இலவச விளம்பரம் கிடைக்காமல் போய்விட்டது. அண்ணாதுரையும் தம்பிதுரையும் இரட்டையர்கள். விதி அவர்கள் வாழ்வைப் புரட்டிப் போட, தியாகத்தில் சிறந்தவர் யாரென்று இருவருக்குள் நடக்கும் போட்டிதான் படத்தின் கதை. விஜய் ஆண்டனி முதன்முறையாக இரட்டையர்களாகத் தோன்றியுள்ளார். தாடி இருந்தால் அண்ணன், இல்லாவிட்டால் தம்பி. போதையில் இருந்தால் அண்ணன், தெளிவாக இருந்தால் தம்பி. விஜய் ஆண்டனிக்கு அம்மா சமைத்துக் கொடுத்தால் அவர் அண்ணாதுரை, அம்மாவிற்கு விஜய் ஆண்டனி சமைத்துக் கொடுத்தால் அவர் தம்பிதுரை. படத்தின் தலைப்பு வரும் முன், வருகின்ற விஜய் ஆண்டனியின் அறிமுகம் மிக அட்டகாசமாய் உள்ளது. ஆனால் அந்தப் பூர்வாங்க பில்டப், அதோடு முடிந்து விடுவது துரதிர்ஷ்டம். யமன் பட...