Shadow

Tag: சூர்யா சேதுபதி

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்திலேயே வைத்துக் கொல்வதற்குக் கரிகாலனின் மனைவி மாயா முயற்சிகள் எடுத்தவண்ணம் உள்ளார். அவற்றிலிருந்து சூர்யா தப்பினானா, சூர்யா ஏன் ச.ம.உ.-வைக் கொன்றான் என்பதே படத்தின் முடிவு. முன்னாள் ச.ம.உ.வாக முத்துகுமார் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அவரது ரியாக்‌ஷன்கள் போக்குகிறது. சூர்யாவின் அம்மாவாக தேவத...
Surya Sethupathi: தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃப் | பீனிக்ஸ் – வீழான்

Surya Sethupathi: தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃப் | பீனிக்ஸ் – வீழான்

சினிமா, திரைச் செய்தி
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேகா, "மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி.எஸ் அவர்கள் பிரமாதமாக இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா அவர்களின் முதல் படமே சிறப்பாக வந்துள்ளது. அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வருவதற்கு இந்தப் படமே ஒரு எடுத்துக்காட்டு. பீனிக்ஸ் என்பது ஒரு நம்பிக்கையின் குறியீடு. நம்பிக்கைதான் ஒரு வாழ்க்கையின் முக்கியமானது. நம்பிக்கை...