Shadow

Tag: சென்ட்ராயன்

இரும்பன் விமர்சனம்

இரும்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஆஃபீஸுக்கு, சமண மதத்தைச் சேர்ந்த மஹிமா மீது காதல் வந்துவிடுகிறது. அவர்கள் காதலைச் சேர்க்க பரதர் (மீனவ) இனத்தைச் சேர்ந்த பீட்டர், பிளேடுடனும் ஆஸ்பித்திரியுடனும் இணைந்து மஹிமாவைக் கடத்தி விடுகின்றனர். ஆஃபீஸின் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. அலுவலகத்தில் பிறந்ததால் ஆஃபீஸ் என்றும், மருத்துவமனையில் பிறந்ததால் ஆஸ்பித்திரி என்றும் பெயர் வைத்துவிடுகின்றனர். ஆஃபீஸாக ஜூனியர் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். எம்ஜியார் - ஜானகியின் வளர்ப்பு மகள் சுதாவின் மகனாவார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார். குறவர்களை அசூயையாகப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில், மஹிமா ஆஃபீஸை அன்புடன் பார்த்தவுடன், நாயகனுக்குக் காதல் வந்துவிடுகிறது. சமணத் துறவியாக மடத்தில் சேரும் மஹிமாவைக் கடத்திக் கடலுக்குக் கொண்ட...
அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உச்ச நடிகரான பவர் ஸ்டாருக்கு, மதுரையில் அதி தீவிர ரசிகர்களாக சிம்மக்கல் சேகர், கோரிபாளையம் ரஹமத், பழங்காநத்தம் பாபு ஆகியோர் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி, ‘பாகுபலியும் பாயும்புலியும்’ என்ற பவர் ஸ்டாரின் படத்தை மதுரை ஏரியா வினியோகத்திற்கு எடுத்து ஓட்டாண்டி ஆகுகின்றனர். தன் உயிரினும் மேலான தலைவனைப் போய்ப் பார்க்கின்றனர். தலைவரோ உதாசீனப்படுத்தி விட, அவமானப்படுத்தப்படும் மூன்று ரசிகர்களின் எதிர்வினை தான் படத்தின் கதை. ‘பாட்ஷா’ பட ரஜினி பாணியில் அறிமுகமாகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். பின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரையும் ‘ஸ்பூஃப்’ செய்யும் காட்சிகள் வருகிறது. தொடக்கத்தில் இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் அதன் பின் தடுமாறத் தொடங்கி, அதையே கடைசி வரை செய்கிறது. ‘ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க..’ என நீளமான பெயர் தாங்கிய மருத்துவராக மன்சூர் அலி கான் ...
பைசா விமர்சனம்

பைசா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குப்பை பொறுக்கும் தொழிலாளியான முருகனுக்கு அடையாறு நதிக் கரையோரமாக 100 கோடி ரூபாய் கிடைக்கின்றது. அந்தப் பணம் அவனைப் படுத்தும் பாடு அல்லது அவனுக்குள் நேரும் அகப்போராட்டம் தான் படத்தின் கதை. முதல்முறையாகத் தனி நாயகனாக நடித்துள்ளார் ஸ்ரீராம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாமல் போகிறதென வருந்தும் முருகனுக்கு, சாலையில் கிடைக்கும் 3000 ரூபாய் பெரிதாகப் படவில்லை. ஆனால், 100 கோடியைப் பார்த்ததும் அவன் மனம் சபலமுறுகிறது. தனது பேன்ட்டின் கிழிசலை 1000 ரூபாய் தாள் கொண்டு அடைக்குமளவு போதை தலைக்கேறுகிறது. முருகனாக ஸ்ரீராம் நன்றாக நடித்துள்ளார். ஆனால், காதலோடு சிரிக்கும் பொழுதுதான் கொஞ்சம் பொழுதுதான் லேசாகத் தடுமாறுகிறார். டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் பணி புரியும் வேணியாக அறிமுகமாகியுள்ளார் ஆரா. அவருக்கு எல்லாவிதமான ஆடையும் பொருந்துகிறது. முருகன், வேணிக்குள்ளான காதல் அத்தியாயம் மிக யதார்த்...