Shadow

Tag: செம்மலர் அன்னம்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பே கதையைச் சொல்கிறது. ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கிறது. அது யாருக்கு கிடைக்கிறது, எப்படி கிடைக்கிறது, அதை அந்தக் கதாபாத்திரத்தால் அனுபவிக்க முடிந்ததா, அந்தப் பொற்காசுகளை பயன்படுத்துவதில், சொந்தம் கொண்டாடுவதில் எத்தனை சவால்கள் வந்தன என்பதே இந்த ஆயிரம் பொற்காசுகளின் கதை. பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் “ஆயிரம் பொற்காசுகள்” ஆகும்.  அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார். விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவர்களோடு ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.  விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இ...
கட்டில் விமர்சனம்

கட்டில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மூன்று தலைமுறையாக வசித்து வரும் வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் காசு பணத்தைக் கொண்டு, வியாபாரம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நாயகனின் அண்ணன்கள் மற்றும் அக்காமார். நாயகன் தன் தாய், தன் மனைவி மற்றும் மகனோடு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்து வருகிறான். நாயகனும் அவன் மனைவியும், நாயகனின் தாயும் அந்த வீட்டை விற்கும் முயற்சியை கைவிடச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அது முடியாமல் போகும்பட்சத்தில், தங்கள் பரம்பரையில் ஒவ்வொரு குழந்தையும் பிறந்து தவழ்ந்த பூர்விக கட்டிலையாவது காப்பாற்ற முனைகிறார்கள். அதை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதே “கட்டில்” திரைப்படம்.ஒரு இயல்பான யதார்த்தமான கதை. அந்த கதையின் போக்கில் ஒரு சிக்கல், அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் க்ளைமாக்ஸ் என எளிய முறையில் பயணிக்கும் திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதில் இவ்வளவு பெர...