செல்வந்தன் விமர்சனம்
நேரடியாக தமிழில் வெளிவந்திருக்கும் மகேஷ் பாபுவின் முதல் திரைப்படம் இது.
கோடீஸ்வரரான ரவிகாந்தின் ஒரே மகன் ஹர்ஷா. தனது சொந்த ஊரான தேவரக்கோட்டைக்குச் சென்று, அவ்வூரைத் தத்தெடுத்துக் கொள்கிறான். முன்பே அவ்வூரைத் தத்தெடுத்துக் கொண்ட மினிஸ்டர் வெங்கட் ரத்னமும், அவர் தம்பி சசியும், ஹர்ஷாவின் இந்தச் செயலால் கோபம் கொள்கின்றனர். கடைசியில் ஊர் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் படத்தின் கதை.
ஹர்ஷாவாக மிகவும் அசால்ட்டாக நடித்துள்ளார் மகேஷ் பாபு. அவர் முகத்தில் ஒரு பேரமைதி நிலவுகிறது. ஆட்களைத் தூக்கிப் போட்டு துவம்சம் செய்யும்போது கூட அவர் முகத்தில் உக்கிரம் காணப்படுவதில்லை. அடியாட்கள் பவனி வர மாந்தோப்புக்குள் அவர் சைக்கிளில் நுழையும் காட்சி செம மாஸ். கோடீஸ்வரரின் மகனாகக் கச்சிதமாக கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். தன் கிராமத்து மீது மிகவும் அபிமானமுள்ள சாருவாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மிகவும் அ...