Shadow

Tag: செல்வராகவன்

மார்க் ஆண்டனி விமர்சனம்

மார்க் ஆண்டனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை.ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ சென்று தன்னையே பார்க்கும்.  ஆனால் தொடர்புகளை ஏற்படுத்த முயலாது, வெறும் சம்பவங்களை மட்டும் மாற்றும். அதாவது டைம் டிராவல் செய்து வந்திருக்கும் நான், எதிர்காலத்தில் இருக்கும் என்னையோ அல்லது இறந்த காலத்தில் இருக்கும் என்னையோ பார்க்கும் போது நான் சென்று என்னுடன் பேச முற்படமாட்டேன்.  ஏனென்றால் அந்த கால...
சாணிக்காயிதம் விமர்சனம்

சாணிக்காயிதம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
க்வென்டின் டரான்டினோ படங்களின் பாதிப்பில், ரத்தமும் சதையும் தெறிக்கும் ஒரு பழிவாங்கும் படம் தமிழில் வந்தால் எப்படியிருக்கும்? சாதிப் பெருமிதம் எனும் கயமையால் நிகழ்த்தப்படும் கொடூரத்தைப் பொறுக்கமாட்டாமல், பாதிக்கப்பட்ட பொன்னி எனும் ஒரு பெண் பழிவாங்கப் புறப்படுவதே சாணிக்காயிதத்தின் கதை. தன் கணவனையும் மகளையும் உயிரோடு எரித்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சாரார் முனையும் போது, சட்டமாவது மயிராவது என தனது கைகளாலேயே அனைவரையும் உயிரோடு எரித்துக் கொல்லும் வன்மத்துடன் தன் அண்ணன் சங்கையாவுடன் இணைந்து கொலை தாண்டவமாடுகிறார் பொன்னி. நகைமுரண் என்னவென்றால், புதுப்பேட்டையில் தனுஷைக் கொண்டு செல்வராகவன் காட்சிப்படுத்திய தனி மனிதனுள் தன்னிச்சையாக எழும் கொலைவெறியை, செல்வராகவனைக் கொண்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அப்படத்தில் தனுஷுக்கான நியாயங்களை விட, இப்படத்தில் செல...
சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ்

சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக 'சாணிக்காயிதம்' திரைப்படம் உருவாகியுள்ளது. தலைமுறை தலைமுறையாக அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில் சிக்கித் தவிக்கும் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் பழிவாங்கும் க்ரைம் த்ரில்லரில் நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ், "இனிமையாகவும் வசீகரமாகவும் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்த எனக்கு, பொன்னி கதாபாத்திரத்திற்காக மிகவும் முரட்டுத்தனமான, ரத்தம் சதையும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் கூறினர். அது போக இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒல்லியாக வேண்டும் எனக் கூறினர். முன் தயாரிப்பு விஷயத்தில் உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் அந்த உடையை அணிந்து கொண்டு, அந்த மேக்கப்பை போட்டுக் கொ...
NGK விமர்சனம்

NGK விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை. கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். 'செல்வராகவன் இஸ் பேக்' எனத் துள்ளத் தொடங்கிய மனம், இரண்டாம் பாதியில் அப்படியே சொய்ங் எனத் துவண்டு விடுகிறது. குறிப்பாக, கீதா குமாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி, தன் கணவன் குமரன் மீது சந்தேகப்படும் காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள அதீதமான மனோசக்தி தேவைப்படுகிறது. ஏன் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகளை எல்லாம் தூக்காமல் விட்டார்களோ? மிகச...