Shadow

Tag: சேரன் – சரவணன்

பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ்
கிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால் போதும், ‘அக்காவ், என் மாமன் செய்யற வேலையைப் பார்த்தியா?’ என ஒரு பாட்டம் மூக்கைச் சிந்தி அழுது வைக்கும். அதற்கப்புறம் சகஜமாகி காப்பி தண்ணி குடித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தான் கிளம்பும். அடுத்த தெருவிற்குப் போனால், ‘அயித்த என் மாமியா என்ன பண்றா தெரியுமா?’ என மறுபடியும் அழுவதற்குத் தயாராகிவிடும். நிறைய சினிமாவில் கூட அந்த மாதிரி கேரக்டர் வரும். அந்த கேரக்டரோட டவுசர் போட்ட அப்டேட்டட் மாடர்ன் வெர்ஷன் தான் சாக்ஷி. நேத்து முதல் ஷாட்டே சாக்ஷி அழுது கொண்டிருப்பது தான். கேமராவைப் பார்த்து, ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என அழுது கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட அறிவாளியும் காதல் உணர்வு வரும் போது எப்படி அடி முட்டாளாக மாறிடுவாங்க என்பதற்கு, சாக்ஷி ஒரு சிறந்த உதாரணம். அண்ணா யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய பெண் அவர். நன்றாகப் படிப்பவர் எல்...