Shadow

Tag: சேரன் – மீரா சண்டை

பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ்
அதே கக்கூஸ், அதே கவின், அதே லியா, அதே கடலை, அதே நான், அதே நீங்க. ஏய் யப்பா, முடியலைய்யா கவினு. இடத்தையாவது மாத்தலாம். நாட்டாமைக்கு மரியாதை தருவதைப் பற்றி பிக் பாஸ் கிளாஸ் எடுத்திருப்பார் போல. டாஸ்க் ஆரம்பித்த உடனே, ஒரிஜினல் நாட்டாமை பாட்டு பாடி சேரனைக் கூட்டிட்டு வந்தார். இப்படியே மொக்கையாகவே போய்க் கொண்டிருக்கே என்று யோசித்த 'டைரக்டர்' சரவணன், ‘நான் ஒரு உண்மையைச் சொல்லப்போறேன்’ என சாண்டி, கவினை அழைத்து ஒரு கதை சொல்றார். கதைப்படி பாம்புபட்டி நாட்டாமை சேரனும், கீரிப்பட்டி நாட்டாமி மதுவும் கணவன்-மனைவி. தன் மனைவி தன்னை மாதிரியே நாட்டாமையாக ஆக வேண்டுமென ஆசைப்பட்ட போது, அதைத் தடுக்கிறதானால் இரண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. அவங்களோட குழந்தை தான் லியா. இது எப்படி இருக்கு? இதை வைத்து ஒரு ட்ராமா செய்யலாமென சேரனிடமும், மதுவிடமும் இதைச் சொல்லி, லிவிங் ஏரியால எல்லாரும் கூடி இருக்கும் போது இந்த உண்மைய...