Shadow

Tag: சேரன்

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்குள் ஒரு பெரிய வீட்டிற்குள் சாவு விழுந்துவிடுகிறது. அந்த ஊரில் பிணத்திற்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும், குடிமகன் என்று பொதுவாக அழைக்கப்படும் சின்னச்சாமி (சேரன்) கதாபாத்திரம் தனக்கு முன்பு நேர்ந்த அவமானகரமான நிகழ்வுகளால்,  பிணத்திற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் வெட்டியான் பணியை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து பிழைத்து வருகிறான்.  ஒட்டுமொத்த ஊரும் அவனை இறந்த பெரியவருக்கு இறுதிச்சடங்கு செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்த,  மிரட்ட, அந்தத் தொழிலை இனி தன் வாழ்நாளில் தான் ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சின்னச்சாமி திடமாக முடிவு செய்து ஒட்டு மொத்த ஊரையும் எதிர்த்து நிற்கின்றான். இதன் முடிவு என்ன ஆனது என்பதே இந்த தமிழ்க்குடிமகன் பேசும் அரசியல்.சமகால சமூக நிகழ்வுகளையும், சாதிய நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பார்க்கும் போது தமிழ்க்குடிமகன் ஒரு ...
சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
லட்சுமி  கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  உருவாகியுள்ள  திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்.  இயக்குநர் சேரன் கதாநாயகனாக  நடித்துள்ள இந்த படத்தை  'பெட்டிக்கடை' , 'பகிரி'  ஆகிய படங்களை  இயக்கிய  இசக்கி கார்வண்ணன்  இயக்கியுள்ளார். முக்கிய  வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி,  துருவா, 'மிக மிக அவசரம்'  புகழ்  ஸ்ரீபிரியங்கா,  தீபிக்ஷா,  அருள்தாஸ்,  ரவிமரியா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.  இந்தப்  படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை  கார்த்திக்  மேற்கொண்டுள்ளார்.  ‘தமிழ்க் குடிமகன்’ திரைப்படத்தின்  இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள்  முன்னிலையில்  சென்னையில்  இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  முக்கிய அம்சங்கள் வருமாறு: படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது...
திருமணம் விமர்சனம்

திருமணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக இழந்துவிடுவது நம் பெருமைகளில் ஒன்று. கையில் பணமில்லாவிட்டாலும், பணத்தை எப்படியேனும் புரட்டி வாழ்நாளைக் கடனாளியாகக் கழிக்க அஞ்சாத தற்கொலை மனோபாவம் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மிகவும் அரிதானவை. சேரன் முன் வைக்கும் திருத்தம், திருமண வைபவத்தில் அதீதமாக விரயமாகும் பொருளாதாரத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒன்றை மட்டுந்தான். தலைப்பில் தொனிக்கும் திருத்தங்'கள்' என்ற பன்மை விகுதி ஒரு சினிமாட்டிக் எக்ஸாகிரேஷன் தான். சமூகத்தின் மீதான சேரனின் அதீத காதல் அவரது கலையார்வத்தையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். பெரியண்ணன் பாவனையில், தலைப்பிலேயே 'திருத்தங்கள்' என்று தன் சமூக அக்கறையை அடக்கமாட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். சேரன் பேசிக் கொண்டேயிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டாரிடம் விவாதத்தை முன் வைக்காமல், இதுதான் சரியெனத் தான் நம்பும் விஷயத்தை இடம் பொருள்...
சேரனின் ராஜாவுக்கு செக்

சேரனின் ராஜாவுக்கு செக்

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட, நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த "ராஜாவுக்கு செக்" படம் மீண்டும் பணிகளைத் துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாளத் திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்தப் படத்தை, 'பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ்' சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். "மலையாளத் திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க காலடி எடுத்து வைத்திருக்கிறோம். ஒரு ந...