சைரன் விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை..
துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோக...