இஞ்சி இடுப்பழகி விமர்சனம்
குண்டாய் இருக்கிறார் ஸ்வீட்டி. அதனால் அவரது திருமணம் தள்ளிப் போகிறது. எப்படியாவது தன் மகளின் எடையை, மிகக் குறைந்த நாட்களிலேயே குறைத்து விடவேண்டுமென ‘ஜீரோ சைஸ்’-இல் சேர்க்கிறார் ராஜேஸ்வரி. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, இது நிறைய தெலுங்குப் படம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் தமிழ்ப்படம் என்ற புரிதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது க்ளோஸ்-அப் ஷாட்களில் ஒட்டும் கதாபாத்திரங்களின் உதடு, வைட் ஷாட்களில் ஒட்டாமல் போகிறது. ‘இது தமிழ்ப்படமும் தான்’ என்ற லேசான நம்பிக்கையையும், ‘சைஸ் ஜீரோ’ பாடலில் தன் நடனத்தால் சுக்குநாறாக நொறுக்கி விடுகிறார் அநி.
ஸ்வீட்டியான அனுஷ்காவை மட்டுமே மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளனர். அனுஷ்காவும், ஸ்வீட்டி எனும் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். அதை நமக்கும் கடத்தி விடுகிறார். ஆர்யா முதல் இஞ்சி இடுப்பழகியான சோனல் செளஹன் வரை ...