![சோலோ – டப்பிங் படம் இல்லை](https://ithutamil.com/wp-content/uploads/2017/10/SOLO-Tamil-film-fi.jpg)
சோலோ – டப்பிங் படம் இல்லை
“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா நடிச்சிருக்கார் துல்கர். தன்ஷிகாவும் செமயா நடிச்சிருக்காங்க” என்றார் சதீஷ்.
“ரெமோ படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்தப் படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்தப் படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றார் நடிகர்...