Shadow

Tag: ஜனனி ஐயர்

Hot Spot விமர்சனம்

Hot Spot விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவ...
பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

சமூகம், தொடர்
மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோ...
அதே கண்கள் விமர்சனம்

அதே கண்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் "அதே கண்கள்". அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை. ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. நெடுஞ்சாலை, ஜீரோ ஆகிய படங்களிலேயே தன் நடிப்பை நிரூபித்து விட்டவர் ஷிவதா. எனினும் இந்தப் படத்தின் மூலம் தான் பரவலாகக் கவனிக்கப்படுவார் என்பது திண்ணம். தீபா எனும் பாத்திரத்தில் பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார். அறிமுக காட்சியிலேயே அசத்திவிடுகிறார். அவரது குணாம்சமும் கடைசி ஃப்ரேம் வரை ஈர்க்...