Shadow

Tag: ஜாக்கி சான்

விஜயபுரி வீரன் விமர்சனம்

விஜயபுரி வீரன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஸ்டான்லி டாங்கின் ‘தி மித் (2005)’, ‘குங்ஃபூ யோகா (2017)’ ஆகிய படங்களில், ஜாக்கிசான் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் தோன்றிக் கலகலப்பாகச் சாகசம் செய்திருப்பார். கங்குவா நாயகி திஷா பட்டானியுடனும், சோனி சூத்-உடனும் இணைந்து குங்ஃபூ யோகா படத்தில் நடித்திருப்பார். அப்படங்களின் தொடர்ச்சியாக, ‘எ லெஜெண்ட் (தி மித் 2)’-வாக வெளியாகியுள்ளது. தமிழில், விஜயபுரி வீரன் என மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். பனிப்பாறையில் ஒரு பழங்கால மரகதப் பதக்கம் கிடைக்கிறது. அப்பதக்கம் கிடைத்தது முதல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராம் அவர்களுக்கு, விநோதமான கனவுகள் வருகின்றன. அக்கனவுகளில், விஜயபுரி வீரனான வீராங்கனின் வாழ்க்கை பற்றியும், மரகதப் பதக்கம் பற்றியும், அவரது காதலி பற்றியும் தெரிய வருகிறது. அக்கனவு அவரைக் கபாடபுரம் மறைத்து வைக்கும் பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்கிறது.  AI தொழில்நுட்பத்தின் உதவியால், ...
ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கி சானின் ஆக்ஷன் படம் ஒன்று ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘தி ஃபாரீனர்’. இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து, 007 ஆகக் கலக்கிய பியர்ஸ் பிராஸ்னனும் நடித்துள்ளார். ஸ்டீஃபன் லெதர் எழுதிய 'தி சைனா மேன்' எனும் நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் டேவிட் மார்கோனி. பிரபல ஹாலிவுட் இயக்குநர் இயக்குநர் மார்டின் கேம்பெல் படத்தை இயக்கியுள்ளார். 2006இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'கேசினோ ராயல்' படத்தை இயக்கியவர் கேம்பெல் என்பது குறிப்பிடத்தக்கது. பியார்ஸ் பிராஸ்னன் 007 ஆக நடித்த 'கோல்டன் ஐ' படத்தை இயக்கியவரும் இவரே! 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பியர்ஸ் பிராஸ்னனுடன் இணைகிறார். க்வான் (Quan) என்பவர் லண்டனைச் சேர்ந்த தொலிழதிபர். அவரது பதின் வயது மகள் ஒரு வெடி விபத்தில் இறந்து விடுகிறாள். அரசியல் கா...
தேவி தமன்னா

தேவி தமன்னா

சினிமா, திரைச் செய்தி
தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?' "ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?" என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று 'வுட்'களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் வி...