ஜப்பான் விமர்சனம்
கடந்த வருடத்தின் தீபாவளி வெற்றியாளரான ‘சர்தார்’ படத்தின் நாயகனான கார்த்தியின் படமென்பதாலும், குக்கூ, ஜோக்கர் முதலிய படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜுமுருகனின் படமென்பதாலும், ஜப்பான் மீதோர் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
இருநூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள், ராயல் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டுத் திருடப்பட்டுவிடுகின்றன. முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பாங்கினைக் கொண்டு, கொள்ளையடித்தது ஜப்பான் என உறுதி செய்கின்றது காவல்துறை. ஜெகஜால கில்லாடியான ஜப்பானைக் காவல்துறையால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
கங்காதரராக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். படத்தின் அசுவராசியத்திற்குக் காரணம், கங்காதரர் போல் முழுமை பெறாத கதாபாத்திரங்களே காரணமாகும். பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஜித்தன் ரமேஷைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது, திரைக்கதையின் பலவீனத்துக்கு அச்சாரம் இட்டுள்ளது. ‘அண்ணாமலை...