Shadow

Tag: ஜாலியோ ஜிம்கானா திரைப்படம்

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நான்-ஸ்டாப் நான்சென்ஸ் என படத்தைப் பற்றிப் படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளனர். ‘லாஜிக் பார்க்க்காதீங்க. மூளையைக் கழட்டி வைத்துவிட்டு, ஜாலியா படம் பார்த்துச் சிரிச்சுட்டுப் போங்க. உங்களைச் சிரிக்க வைக்கிறதே மட்டுமே எங்கள் நோக்கம்!’ என படம் தொடங்கும் முன்பே இயக்குநரின் வாய்ஸ்-ஓவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது. வெள்ளைக்காரன் பிரியாணி எனும் உணவகத்தை நடத்தி வருகின்றார் தங்கசாமி. தொழில் நொடிந்து போக, அவரது பேத்தி பவானி, கடன் வாங்கி ஒரு பிரியாணி கடையைத் தாத்தாவிற்கு வைத்துக் கொடுக்கின்றார். அரசியல்வாதியான அடைக்கலராஜ் சமஉ, தங்கசாமிக்கு ஒரு பெரிய ஆர்டரைக் கொடுத்துவிட்டு, பணம் தராமல் ஏமாற்றிவிடுகிறார். அடைக்கலராஜ் மீது வழக்கு போட பூங்குன்றன் எனும் வக்கீலைப் பார்க்கப் போகின்றனர். பூங்குன்றன் இறந்து கிடக்க, தங்கள் மீது கொலைப்பழி விழுமோ என பயந்து, பூங்குன்றன் பிணத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நினைக்கின்...