ஜிகர்தண்டா விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா.
தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நே...