
“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'லீடர்' என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, "ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த வகையில் நான் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றால் அது இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படங்களைத்தான். அவருடைய படங்களைப் பார்க்கும்போது எல்லாத் தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரிடம் எல்லாப் படங்க...



