Shadow

Tag: ஜி.என்.ஆர்.குமரவேலன்

வாகா விமர்சனம்

வாகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகிஸ்தான் பெண்ணான காணமைக் காதலிக்கிறான் இந்திய இராணுவ வீரனான வாசு. அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஹரிதாஸ் படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் அடுத்த படமிது. ஹரிதாஸ் ஈட்டிய புகழை மறக்காமல், எதிலும் கவனம் செல்லாத நாயகனுக்கு ஆட்டிசம் இருந்தது என ஒரு முடிச்சுப் போட்டுள்ளார். இலவசமாக மது கிடைக்குமென இராணுவத்தில் சேர்ந்து விடுகிறான் நாயகன். இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் அலட்சியத்தையும் படம் நெடுகே வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம் பிரபு. நாயகியைப் பார்த்ததும் லட்சியக் காதலனாகி விடுகிறார். நாயகியாக ரன்யா ராவ். கதாபாத்திரத்தின் பெயர் காணம் என்றாலும், நாயகன் காஜல் எனப் பெயரை மாற்றிக் கொள்கிறான். ஏன் காஜல் என்ற பெயரை நாயகிக்குச் சூட்டுகிறான்? காணம் என்ற பெயருக்கு என்னக் குறைச்சலென்றும் தெரியவில்லை. இத்தகைய குழப்பமும், தெளிவின்மையும் திரைக்கதை நெடுகேயும் உள்ளது. கண்டதும் காத...
ஹரிதாஸ் விமர்சனம்

ஹரிதாஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே!! ஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை.  ஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை 'அப்பா'. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் மட்டுமே. கைகளை வைத்திருக்கும் பாங்கு, நடை, எங்கேயோ பார்வையைக் குவித்திருப்பது, சத்தத்தால் ஈர்க்கப்படாமல் இருப்பது, கடைகளில் உள்ள பொருட்களை நேராக்குவது, குதிரைகளைக் காணும் பொழுது தன்னை மறக்கும் லயம் என அசத்தியிருக்கும் ப்ருத்விராஜின் முதுகில் படம் பயணிக்கிறது. ஹரிதாஸ் தனக்கிருந்த குறைபாடுகளில் இ...