சகுந்தலை (1940)
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை.
ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள்.
பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும்.
பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...