Shadow

Tag: ஜி.ராமனாதன்

ஹரிதாஸ் (1944)

ஹரிதாஸ் (1944)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், என்.சி.வசந்த கோகிலம், புளிமூட்டை ராமசாமி) ‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு. இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது. ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ இரண்டாவது உலகப்போர் மும்மரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால், அப்போதைய அரசுக் கட்டுப்பாட்டின் காரணமாக நீளம் குறைந்த படமாகத் தயாரிக்கப்பட்டது. மொத்த நீளம் 10995 அடிகள் தாம். இது அக்கால நடைமுறைப்படி மிகச் சிறிய படம். இந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்ட...
சிவகவி (1943)

சிவகவி (1943)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.ஆர்.ராஜகுமாரி; டி.பாலசுப்ரமணியம்; செருகளத்தூர் சாமா) பொய்யாமொழிப் புலவரைத் தான் ‘சிவகவி’ என்பார்கள். நாற்பத்து மூன்றில் வெளிவந்த ‘சிவகவி’ படத்தை, 1948 இல் ஒரு சிவராத்திரி இரவில், சிவராத்திரி கொண்டாடிய சில சிறுவர்களுடன் என்னையும் சேர்த்து படம் பார்ப்பதற்கு தியேட்டர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் எங்கள் தெருவில் வசித்த பெரியவர் ஒருவர். வெகு சுவாரஸ்யமாகப் படம் பார்த்த நினைவு. பாடல்கள் பற்றிய விசேஷ அறிவோ, புரிதலோ ஏற்படாத காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகளையே பெரிதும் விரும்பி, ரசித்துப் பார்க்க முடிந்தது. என்றாலும், மிகவும் இனிமையான பாடல்கள் தான் இப்படத்தில் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டிய அம்சம். சிறுவயதில் மனதில் பதியும் பல சம்பவங்கள் எளிதில் நம்மை விட்டுப் போய்விடுவதில...
ஆர்ய மாலா (1941)

ஆர்ய மாலா (1941)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி) 1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), ஜகதலப்பிரதாபன் (1944), கன்னிகா (1947), ஏழைபடும்பாடு (1950), மலைக்கள்ளன் (1954) மற்றும் மரகதம் (1959) போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ஆர்ய மாலா’. இது ஒரு மாபெரும் வ...