Shadow

Tag: ஜி.வி. பிரகாஷ்குமார்

DeAr விமர்சனம்

DeAr விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம். கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இளவ...
”இப்படங்கள் எல்லாம் என் நான்கு வருட உழைப்பு” – ஜி.வி.பிரகாஷ்குமார்

”இப்படங்கள் எல்லாம் என் நான்கு வருட உழைப்பு” – ஜி.வி.பிரகாஷ்குமார்

சினிமா, திரைச் செய்தி
Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில்…நடிகை நந்தினி பேசியதாவது.... இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.நடிகர் அப்துல் லீ பேசியதாவது.... ஒரு ரகசியம் சொல்றேன் ஜீவிக்கு 4 குளோன் இருக்கு, ஒண்ணு மிய...
சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோகிப...
கேப்டன் மில்லர் விமர்சனம் :

கேப்டன் மில்லர் விமர்சனம் :

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
’முன்னாடி நம்ம நாட்டுக்காரனுக்கு கீழ அடிமையா இருந்தோம்… இப்ப வெளிநாட்டுக்காரன் கீழ அடிமையா இருக்கோம்… யார் கீழ இருந்தா என்ன…? எல்லாம் அடிமைதான… இவன் என்னை செருப்பு போடாதங்குறான்… கோயிலுக்குள்ள வராதங்குறான்… அவன் என் காலுக்கு பூட்ஸ் குடுக்குறான்.. மருவாதியான வாழ்க்கை வாழணும்னு ஆசப்படுறேன்… நான் பட்டாளத்துக்கு போறேன்…” என்று ஆங்கிலேயரின் சிப்பாயாக பணிக்குச் சேரும் அனலீசன் என்கின்ர ஈசா, மில்லர் என்கின்ற பெயர் மாற்றத்துடன் துப்பாக்கி ஏந்த அவனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது. அதை செய்ய முடியாதவனாக மனம் மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நோக்கி பிடிக்க வேண்டிய துப்பாக்கியை வெள்ளையனின் ராணுவ வீரர்களை நோக்கியும் தளபதியையும் நோக்கியும் திருப்பினால்” என்ன நடக்கும் என்பதை கற்பனையாக பேசி இருக்கும் திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”.இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்...
மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹீரோ ...
மார்க் ஆண்டனி விமர்சனம்

மார்க் ஆண்டனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை.ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ சென்று தன்னையே பார்க்கும்.  ஆனால் தொடர்புகளை ஏற்படுத்த முயலாது, வெறும் சம்பவங்களை மட்டும் மாற்றும். அதாவது டைம் டிராவல் செய்து வந்திருக்கும் நான், எதிர்காலத்தில் இருக்கும் என்னையோ அல்லது இறந்த காலத்தில் இருக்கும் என்னையோ பார்க்கும் போது நான் சென்று என்னுடன் பேச முற்படமாட்டேன்.  ஏனென்றால் அந்த கால டைம...
”இயக்குநர் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்தார்” – ஜி.வி.பிரகாஷ்

”இயக்குநர் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்தார்” – ஜி.வி.பிரகாஷ்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஜி.வி பிரகாஷ்குமார், கெளரி கிஷன் இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் “அடியே”.  இத்திரைப்படம் வரும் ஆக்ஸ்டு 25ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.  இப்படத்தில் மதும்கேஷ் பிரேம், ஆர்.ஜே.விஜய், வெங்கட் பிரபு, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். திட்டம் இரண்டு திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கிறார்.  கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டிஸ் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.பேரலல் யுனிவர்ஸ் மற்றும் அல்டர்நேட் ரியாலிட்டி கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித...
ரவிதேஜாவின் ” டைகர் நாகேஸ்வரராவ் ” டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு

ரவிதேஜாவின் ” டைகர் நாகேஸ்வரராவ் ” டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
டோலிவுட்டில் மாஸ் மகாராஜாவாக இருந்து வரும் ரவி தேஜாவின் நடிப்பில் முதன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது  “டைகர் நாகேஸ்வரராவ்” திரைப்படம் . நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.  வம்சி இப்படத்தினை இயக்குகிறார்.  “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றும் ”கார்த்திகேயா – 2” படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும்  தேஜ் நாராயண் அகர்வால் இப்படத்தை  வழங்க , மயங்க் சிங்கானியா இணைத் தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒரு தனித்துவமான முறையில் அமைந்திருந்ததாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் தீவிரமடைந்து உள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவ...