
தம்பி விமர்சனம்
பாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
பாபநாசத்தைப் போலவே தம்பியும் ஒரு த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கின்றது. கதை சொல்வதில் தனது த்ரில்லர் திறமையைக் கொட்டி இருக்கிறார் ஜீத்து. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கொட்டியுள்ளார்.
கதைக்கு ட்விஸ்ட் என்பது சுவாரசியமாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று வெறும் ட்விஸ்டாக மட்டுமே கொடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி?
ஜீத்து, மலையாள வாசத்தோடு படத்தை எடுத்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆனால் அது மலையாளப் படமாகத்தான் நகருகிறது. தமிழில் பேசுவதாலேயே தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாது.
ஏன் என்றால், ஒவ்வொரு காட்சிக்குமான அரேஞ்ச்மென்ட்ஸ் மலையாள மார்க்கமாகவே இருக்கிறது. ஒரு காட்சிக்குள் படிப்படியாகக் கதாபாத்திரங்களைக் கொண்டு வர இயக்குநர...