ஜீவன் நடிக்கும் அசரீரி
அறிமுக இயக்குநர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் 'அசரீரி' எனும் அறிவியல் புனைவு படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, "டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராணக் குறிப்புகளைக் கூடத் தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன். இயக்குநர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளைக் கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குநர் திரையில் கொண்டு வருவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை 'அசரீரி' என்ற அதே தலைப்பில் உருவான குறும்ப...