Shadow

Tag: ஜீ. வி. பிரகாஷ் குமார்

“தங்கலான் | பழங்குடி மக்களின் இசை” – ஜி.வி.பிரகாஷ் குமார்

“தங்கலான் | பழங்குடி மக்களின் இசை” – ஜி.வி.பிரகாஷ் குமார்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் ஜீ.‌ வி பிரகாஷ், ''இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன்.‌ பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிற...
ரெபல் விமர்சனம்

ரெபல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூணாரின் நெற்றிக்குடி எஸ்டேட்டைச் சேர்ந்த கதிர் பாலக்காட்டுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார். கல்லூரியிலுள்ள மலையாளிகள் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். கதிர் கலக்கக்காரராக உருமாறி புரட்சி செய்கிறார். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, நாயகன் கதிர் புரட்சி தான் தீர்வு எனக் கலகம் செய்வது, செங்கொடி ஏந்திய LDP கட்சியின் SFY எனும் மாணவர் சங்கத்தை எதிர்த்தும் போராடுகிறார். வசனங்களில் கம்யூனிஸ்ட் என்றே விளிக்கிறார்கள். நாயகன் எதிர்க்கும் இன்னொரு கொடி, நீல வண்ணத்தில் இருக்கும் UDP கட்சியின் KSQ எனும் மாணவர் சங்கமாகும். காங்கிரஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர். கொடி இங்குப் பிரச்சனையில்லை, அதை யார் பிடித்துள்ளார் என்பதைப் பொறுத்தே சிக்கல் என்கிறார் கல்லூரி விரிவுரையாளர் உதயகுமாராக வரும் கருணாஸ். நாயகன் கதிர் உருவாக்கும் TSP (தமிழ் ஸ்டூடன்ட்ஸ் பார்ட்டி)-இன் கொடி, கருப்ப...
“ஜீவி பிரகாஷ் அண்ணா தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார்” – அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ்.

“ஜீவி பிரகாஷ் அண்ணா தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார்” – அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ்.

சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபல்'. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது... ரெபெல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது. இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மி...
மார்ச் 22ல் வெளியாகும் ஜீ.வி. பிரகாஷ்குமாரின் “ரெபல்”

மார்ச் 22ல் வெளியாகும் ஜீ.வி. பிரகாஷ்குமாரின் “ரெபல்”

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இர...
ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே'  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  நேற்று மாலை சென்னை பி.வி.ஆர். சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ 'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.  மல்டிவெர்ஸ்  என்ற  எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்ட...