Shadow

Tag: ஜூலை காற்றில் திரைப்படம்

“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்

“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்

சினிமா, திரைச் செய்தி
ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பேசுகையில், “எட்டு வயது இருக்கும் போது என்னுடைய தாயாரிடம் நான் இசையமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் தாயாரின் அப்பா அதாவது தாத்தா ஒரு மிகப்பெரும் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்தத் தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது பெயர் ஆர்.ஆர்.சந்திரன். சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் எனது தாத்தா ரத்தக்கண்ணீர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம் போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்...
ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

சினிமா, திரைச் செய்தி
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுக்களை யூடியூப் சேனலில் பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்த துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் திரைப்படத்துறைக...