Shadow

Tag: ஜெமோ

மையல் விமர்சனம் | Myyal review

மையல் விமர்சனம் | Myyal review

சினிமா, திரை விமர்சனம்
ஆடு திருடனான மாடசாமிக்கும், மந்திரம் – தந்திரம் தெரிந்த அல்லிக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் சமய சந்தர்ப்பம் சாதகமாக இல்லாததால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. மையல் என்பது மயக்கம் அல்லது மோகம் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன். மைனா படத்தில் கிளைச்சிறை பொறுப்பதிகாரி பாஸ்கராக நடித்திருந்த சேது, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மையல் படத்தின் இயக்குநர் APG ஏழுமலை, மைனா படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் ஆவார். மையலின் முடிவும் மைனா படத்தை ஒத்தே அமைந்திருந்ததை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். கிணற்றில் விழும் மாடசாமிக்கும், அவரைக் காப்பாற்றும் அல்லிக்கும் இடையே மலரும் காதல் கவித்துவமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் முதற்பாதியில் வரும் இந்த அத்தியாயம் மிகவும் ரசிக்கும்படியாக...
வெந்து தணிந்தது காடு விமர்சனம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே ஆரம்பமாகி இருக்கும். அப்படித்தான் ஆரம்பமாகிறது இந்தக் கதையும். எவன் ஒருவனும் விரும்பி கத்தியைத் தொடுவதில்லை. அதைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை அவனைச் சுற்றி நிகழும் தருணங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவனும் தொடுகிறான். அதற்காக அப்படித் தொட்டவன் அத்தனை பேரும் டான் ஆகிவிடுவதில்லை. டான் ஆனவன் எவனும் ரத்ததைப் பார்க்காமல் அந்த இடத்தி...
கலை உத்தியஸ்தர்

கலை உத்தியஸ்தர்

கட்டுரை, புத்தகம்
“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?” பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார். “ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?” “யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?” “யாரோ ஜெமோவா? என்ன சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?” சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?” என பவ்யமாகக் கேட்டார். “தவறு செய்தால் பரவாயில்லையே! மாபெரும் குற்றமல்லவா இழைத்துவிட்டீர்?” “ஆ.. அப்படி என்ன செய்துவிட்டேன்?” “கதை சொல்லியான நீர்.. கலைக்காக வாழும் பேராசான் ஜெமோவைப் பற்றி அறியாதது பெருங்குற்றத்தில்தானே வரும்?” ‘பேராசானா?’ என யோசித்த ...
வியாசன் பறந்த வானில்

வியாசன் பறந்த வானில்

கட்டுரை, புத்தகம்
தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். "வெண்முரசு" என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் தாண்டி அசுரத்தனமானது. அதே பிரமிப்புத்தான் பி.ஏ.கிருஷ்ணனுக்கும். "என் புருஷனும் கோர்ட்க்குப் போறார்னு சொல்றதுபோல, என் மனைவி என்னை எழுத்தாளர்னு நினைச்சிட்டிருக்கா. ஆனா ஒருநாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே மூச்சு முட்டித் திணற வேண்டியிருக்கு. ஆனா ஜெயமோகனோ தினம் மகாபாரதம் எழுதுறார், கட்டுரைகள் ...