ஜெயகாந்தன்
மாயலோகத்தில்..
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஜெயகாந்தன். 1950 - 60 கால கட்டத்தில் தமிழில் தோன்றிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர்.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஜெயகாந்தன் பற்றிய அறிமுகம் அனேகமாகத் தேவைப்படாது என்றுதான் தோன்றுகிறது.
பாரதியாரையும் புதுமைப்பித்தனையும் ஆதர்சமாகக் கொண்டு ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ஜெயகாந்தனும் அப்படித்தான்.ஒரு கால கட்டத்தில் ஜெய காந்தனை ஆதர்சமாகக் கொண்டு எழுதத் தலைப் பட்டவர்களும் உண்டு. ஜெய காந்தனின் இயற்பெயர் டி.முருகேசன். தண்டபாணிப் பிள்ளை முருகேசன்.1934 ல் கடலூரை அடுத்த மஞ்சக் குப்பம் என்கிற ஊரில் பிறந்தவர்.
படிப்பில் அதிக நாட்டமில்லாமல் சிறு வயதிலேயே சென்னை வந்து சேர்ந்தார்.சென்னையில் அடித்தட்டு மக்களிடையே வாழவும்,அவர்களுடைய வாழ்க்கையைத் தானும் அனுபவிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது...