Shadow

Tag: ஜெயப்பிரகாஷ்

ரத்னம் விமர்சனம்

ரத்னம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம். வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப...
கேப்டன் மில்லர் விமர்சனம் :

கேப்டன் மில்லர் விமர்சனம் :

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
’முன்னாடி நம்ம நாட்டுக்காரனுக்கு கீழ அடிமையா இருந்தோம்… இப்ப வெளிநாட்டுக்காரன் கீழ அடிமையா இருக்கோம்… யார் கீழ இருந்தா என்ன…? எல்லாம் அடிமைதான… இவன் என்னை செருப்பு போடாதங்குறான்… கோயிலுக்குள்ள வராதங்குறான்… அவன் என் காலுக்கு பூட்ஸ் குடுக்குறான்.. மருவாதியான வாழ்க்கை வாழணும்னு ஆசப்படுறேன்… நான் பட்டாளத்துக்கு போறேன்…” என்று ஆங்கிலேயரின் சிப்பாயாக பணிக்குச் சேரும் அனலீசன் என்கின்ர ஈசா, மில்லர் என்கின்ற பெயர் மாற்றத்துடன் துப்பாக்கி ஏந்த அவனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது. அதை செய்ய முடியாதவனாக மனம் மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நோக்கி பிடிக்க வேண்டிய துப்பாக்கியை வெள்ளையனின் ராணுவ வீரர்களை நோக்கியும் தளபதியையும் நோக்கியும் திருப்பினால்” என்ன நடக்கும் என்பதை கற்பனையாக பேசி இருக்கும் திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”. இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்...
‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் 75வது படமாக உருவாகி வரும்  திரைப்படம் “சைந்தவ்”. இப்படத்தை Hit  Series திரைப்படங்களை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்குகிறார்.  வெங்கட் போயனப் பள்ளி மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சியை எட்டு முக்கியமான நடிகர்கள் பங்கேற்க படப்பிடிப்பு நடத்தி முடித்திருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு “சைந்தவ்” படக்குழுவினர் ஒரு காணொலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா,  ருஹானி சர்மா, சாரா, ஜெயப்பிரகாஷ் ஆகிய எட்டு பேரும் ஒரு பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து வருவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.  திரைப்படத்தில் இந்த எட்டு பேரைச் சுற்றித் தான் கதை ...