ஜெயிலர் படத்தின் வணிக வெற்றியும், மக்கள் மனநிலையும்
எதிலுமே அதீத நேர்மையோ, ஒழுக்கமோ, அறமோ தேவையில்லை என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்களோ? கலியுகம் என்கின்ற வார்த்தை இந்தக் கருத்தியலுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. இருப்பினும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. இப்பொழுது மக்களின் எதிர்பார்ப்பு என்பது ‘குறைந்தபட்சம்’ எனச் சுருங்கிவிட்டது. ‘லஞ்சம் குடுக்காம எப்டிங்க வேலை நடக்கும்?’, ‘லஞ்சம் குடுத்தா உடனே நடந்திரும்’, ‘ஹெல்மெட்டெல்லாம் போட்டுக்கிட்டு எதுக்கு சார்? எல்லா நாளுமா மாட்றோம்! மாட்றப்ப ஒரு 200 குடுத்தா போதும்’, ‘கொள்ளையடிக்காத அரசியல்வாதி எங்க சார் இருக்காங்க? கொள்ளையடிச்சாலும் மக்களுக்கு ஏதாவது செய்வாங்க சார்’ என்பதான குறைந்தபட்ச நேர்மை, ‘எதுல சார் கலப்படம் இல்லாம இருக்கு?’ என்பதான குறைந்தபட்ச அறம், ‘அனைவரையும், குறிப்பாகப் பெரியவர்களை எள்ளி நகையாடும் எடுத்தெறியும் போக்கு’ என்பதான குறைந்தபட்ச ஒழுக்கம் என இப்படி எ...