“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில், நந்தமூரி பாலகிருஷ்ணா திரையில் தோன்றிராத, மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார்.இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணிக் குரல் ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது.'சரஸ்வதி புத்திர' ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், 'ஜ...