நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்
அறுபத்து மூன்று வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 63 அத்தியாயங்களாகத் தொகுத்து, சிறுவர்களுக்கான "நம் நாயகம்" எனும் நூலை எழுதியுள்ளார் ஜெஸிலா பானு. தனது புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘இந்தப் புத்தகத்தைப் படிச்சா ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழணும்னு தெளிவு கிடைக்கும்’ என்கிறார்.
இப்படியொரு மதம் சார்ந்த நீதி போதனைப் புத்தகம் எப்படி முன்மாதிரி ஆகும்?
பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும், யுக்தியும், எளிமையான மொழி நடையுமே அதற்குக் காரணம்.
புத்தகத்தில் என்ன தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியுமெனப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டிராதவர்கள் நினைக்கக்கூடும். அதைப் பற்றி, இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் திரு. மாலன், “புத்தக வடிவமைப்பு என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். புத்தகத்தை டைப்செட் பண்ணி, பக்கம் பக்கமா அச்சடிச்...