தி லெஜண்ட் விமர்சனம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென பல படங்களைச் சொன்னாலும், உள்ளபடிக்கு அது மிகச் சில படங்களுக்கே பொருந்தும். அதிலொன்று இப்படம். காரணம், லெஜண்ட் சரவணன். தனக்குத்தானே சூடிக் கொண்ட விருப்பப் பெயரைப் படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்தியுள்ளார். ஒரு மாஸ் படத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் உடைய படமாக வந்துள்ளது. காமெடி, சண்டை, சென்ட்டிமென்ட், சமூக அக்கறை என ஒன்றையும் தவற விட்டுவிடக் கூடாதென கவனமாகக் கதையைக் கோர்த்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான சரவணன், தனது ஊர் மக்களுக்குப் பயன்படும்படி ஏதாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பூஞ்சோலை கிராமத்திற்கு வருகிறார். வாத்து மேய்க்கும் கணிதப் பேராசிரியையான துளசி மீது கண்டதும் காதல் வருகிறது. சரவணின் நண்பன் சர்க்கரை நோயால் இறக்க, அதற்கு மருந்து கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் சரவணன். அதனால், சில தனிப்பட்ட இழப்புகளையும், பல ...