Shadow

Tag: ஜோஜு ஜார்ஜ்

இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்

இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள "இரட்டா" படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களைக் கொண்டுள்ளது இந்த த்ரில்லர் படம். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு, இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தமிழ் - மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்குச் சொந்தமான 'அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ்', மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ஏற்கெனவே மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜஜின் கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. பல படங்களில், போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக அ...
மதுரம் விமர்சனம்

மதுரம் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது. கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், எப்படி மருத்துவமனை ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று விவரிப்பார். மருத்துவமனையின் பரபரப்பு மெல்ல அடங்கி, ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் க்யூட்டான ஷாட்களில், மருத்துவமனையின் அழகு மிளிரத் தொடங்குகிறது. மலையாளப் படங்களுக்கே உரிய பிரத்தியேக அழகுகளில் ஒன்று, உணவினையும், அது சமைக்கப்படும் நேர்த்தியையும் மிக அற்புதமான ஷாட்களில் ...
ஜோசஃப் – விமர்சனம்

ஜோசஃப் – விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படம், கடந்த நான்கைந்து வருடங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் இரண்டு லேயர்கள் உள்ளன. ஒன்று க்ரைம் இன்வெஸ்டிகேஷன். மற்றொன்று மிக எமோஷனலான குடும்ப உறவுகள் மீதான சென்ட்டிமென்ட். இரண்டையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது ஜோசஃப். ஜோசஃப், ரிடையர்ட் போலீஸ் அதிகாரி. அவரது இன்வெஸ்டிகேஷன் திறமைக்காக அவரைத் தொடந்து போலீஸ் டிபார்ட்மென்ட் பயன்படுத்தி வருகிறது. முதல் காட்சியில் மிக அநாயாசமாக அந்த வயதான தம்பதியர் கொலையில் கொலைகாரன் யார் என துப்பறியும் காட்சியும் அதற்கான லாஜிக்கும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஜோஃசப்க்கு ஒரு தொந்தரவு செய்யும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அவர் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் சேருவதற்கு முன் அவரது ஊரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெண் வீட்டில், இவர் வேலை இல்லாதவர் என்பதால் இவருக்குப் பெண் தர மறுக்கிறார்கள்...