Shadow

Tag: ஜோனிடா காந்தி

“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

Songs, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் 'சுழல் தி வோர்டெக்ஸ்'-இற்காக சாம் சி.எஸ் இசையமைத்த 'துவா துவா..' எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் 'ராப்பர்' அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் எழுதி உருவாக்கப்பட்ட தொடர் 'சுழல் -தி வோர்டெக்ஸ்'. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் உருவான 'சுழல்- தி வோர்டெக்ஸ்' அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் வலைதளத் தொடராகும். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளுடன், வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இட்டாலியன், ஜப்பானியம், போலந்து, போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ்...