டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்". மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்
இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோ...