Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்
மார்வெல் படங்கள் வெளியாகும் நாட்கள் உலகெங்கும் திருவிழா கோலம் பூண ஆரம்பித்துவிட்டது. ஒரே படத்திலேயே, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மக்கள் மனதைக் கவர்ந்துவிட்டார். பெனிடிக்ட் கம்பர்பேட்சின் நடிப்பும் அதற்கொரு பிரதானமான காரணம்.
பல்லண்டத்திற்கிடையே பயணிக்கும் திறனுள்ள அமெரிக்கா சாவேஸ் எனும் இளம்பெண்ணை, ஒரு ஆக்டோபஸ் மிருகம் துரத்தி வருகிறது. வேற பிரபஞ்சத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துவிடுகிறார். அமெரிக்கா எனும் அந்தப் பெண், நாம் வாழும் பிரபஞ்சத்திற்கான (Earth 616) பாதையைத் திறந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.
இந்தப் பிரபஞ்சத்தின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அம்மிருகத்தைக் கொன்று அமெரிக்கா சாவேஸைக் காப்பாற்றுகிறார். மந்திரங்களில் பரீச்சயமான வாண்டா மேக்ஸிமாஃப் –இடம் உதவி கோருகிறார் டாக்டர். ஆனால், ஆக்டோபஸ் மிருகத்தை அனுப்பியதே ஸ்கார்லட் விட்ச் ஆக மாறிவிடும் வா...