Shadow

Tag: டான்சர் விக்னேஷ்

என்ஜாய் விமர்சனம்

என்ஜாய் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
A சான்றிதழ் பெற்றுள்ள படம். கல்லூரி முடித்த மூன்று இளைஞர்களையும், கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளையும் சுற்றிப் படத்தின் கதை நடக்கிறது. இளைஞர்களின் வாலிப பொழுதுபோக்கு ஒரு பக்கம்; உடுத்தும் உடையாலும், உபயோகப்படுத்தப்படும் கம்மி விலை கைப்பேசியாலும் அல்ட்ரா மாடர்ன் பெண்களால் இளக்காரமாக நடத்தப்படும் மிடில் கிளாஸ் & மெரிட் மாணவிகளின் மன இறுக்கமும், அவர்களது ஆடம்பர வாழ்விற்கான ஏக்கமும் ஒரு பக்கம் என இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. முதற்பாதி படத்தின், தூக்கலான இரட்டை அர்த்த வசனங்களுக்கும், மாடி வீட்டு ஷாலுவின் வசன உச்சரிப்பு த்வனிக்கும் தாராளமாக A+ என சிறப்புச் சான்றிதழே அளிக்கலாம். படத்தின் முதற்பாதியை இதற்கென்றே ஜாலியாக ஒதுக்கியுள்ளனர். இரண்டாம் பாதியில், சுதந்திரம் என்பது எதுவரை இருக்கவேண்டுமென இளம்பெண்களுக்கு ஓர் அட்வைஸோடு முடித்துள்ளார் அறிமுக இயக்குநர் பெருமாள் காச...